பொதுவாக டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்கள் மூலம் ஏற்படும் காய்ச்சலாகும். மழைக் காலங்களில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் என்பதால் டெங்கு காய்ச்சலின் பாதிப்பும் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலுன் டெங்கு காய்ச்சலானது தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
ALSO READ : இனி மலேசியாவிற்கு செல்ல விசா தேவையில்லை..! பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புதுகோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 202 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சாதாரண காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அவர்கள் கூறும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in