புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

Tamil News Insurance amount for storm-damaged vehicles increased to Rs.5 lakh

கடந்த 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயலானது சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலானது தமிழ்நாட்டை மட்டுமல்லாமல், ஆந்திர பகுதிகளிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பின் தற்பொழுது தான் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை வெள்ளத்தால் சேதமடைந்தது. இவற்றுக்கான நஷ்டத்தை காப்பீட்டில் இருந்து பெற ஏராளமான உரிமையாளர்கள் காப்பீட்டு நிறுவனங்களை அணுகி வருகின்றனர். சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ : அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இதுதொடர்பாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எளிமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் காப்பீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும், பொது காப்பீட்டிற்கான தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதாகவும் ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleமாதம் ரூ.60,000 சம்பளமா? பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் ரெடியா இருங்க!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *