கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. அதன்பிறகு தங்கம் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை என அனைத்தின் விலையும் படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த சில ஆண்டுகளாகவே நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க நினைக்கும் ஏழை, எளிய மற்றும் பாமர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ : விரைவில் “மாநாடு 2” திரைப்படம்… இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்!!
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.46 ஆயிரத்து 40 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று(திங்கட்கிழமை) ஒரே நாளில் ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46 ஆயிரத்து 240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 780 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.30 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 க்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81 ஆயிரத்து 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in