தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைப்பது மற்றும் பூங்காகளில் மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ALSO READ : அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..! வானிலை மையத்தின் புதிய தகவல்!!
தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் மற்றும் கோவில்கள் அதிகம் உள்ளது என்பதால் வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வாழ்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு சுற்றுலா பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், இந்த சொகுசு பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in