முன்னதாக கல்யாணம், குழந்தை பிறப்பு போன்ற நல்ல காரியங்களுக்கு மட்டுமே தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், தற்பொழுது எந்தவொரு விழாவாக இருந்தாலும் சரி அதற்கு புதிது புதிதாக தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மேல் இருக்கும் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. அதற்கேற்றவாறு தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
ALSO READ : 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு..!
அந்த வகையில், கடந்த மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும் மறுநாள் குறைவதுமாக இருந்து வந்தது. தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையில் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) சற்று குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5 ஆயிரத்து 635 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்து 080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள இந்த சூழ்நிலையில் இன்று வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து ரூ.78 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in