அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் எஃப்.ஐ.ஆரின்படி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரைக் கைதுசெய்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி(இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். விசாரணைக்கு ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com