`ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை வெற்றி!’ – இஸ்ரோ
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான, ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. வானிலை காரணமாக 3 முறை சோதனை நிறுத்தப்பட்டும், திட்டமிட்டபடி இன்றே சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டுள்ளது இஸ்ரோ. ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வெற்றிகரமாக கடல் பரப்பில் இறங்கியது.

இதனை தொடர்ந்து ககன்யான் திட்டம் அடுத்தக்கட்டத்துக்கு நகரும் என்றும், 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்தும் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பபடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சாதிவாரி கணக்கெடுப்பு! – முதல்வர் கோரிக்கை

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரிய கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அரபிக்கடலில் தேஜ் புயல்!
அரபிக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்த நிலையில், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று அது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தீவிரப் புயலாக நாளை மாலை மாறி, ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட உள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com