தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..!
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. நெல்லையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மவட்டங்களில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முன்னதாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் நேற்று மத்தியக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் தான் இன்று முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வை மேற்கொள்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com