பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?!
துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில் இந்தியர்கள் தான் அதிகம் இருப்பதாக பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், “துபாயிலிருந்து 303 பேருடன் (பெரும்பாலானோர் இந்தியர்கள்) நிகரகுவாவுக்குச் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் நலனை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com