ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி?
திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ஆய்வு செய்தார்.
இந்த புதிய முனயத்துக்கான கட்டுமானப் பணிகளை 2019 -ல் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணிகள் அனைத்தையும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாதங்கள் கட்டுமானப் பணிகள் தடைபட்டதால், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை. தற்போது பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com