மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை!
மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தக் கோர விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சௌத்ரி இன்று மதுரையில் நேரில் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெறவிருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விசாரணையில், விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் நேரில் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனரும் பொதுமக்களிடம் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com