இதில் சீட் மறுக்கப்பட்ட அந்த ஏழு பழைய முகங்களில் முன்னாள் துணை முதல்வரும், கான்பூர் (நிலையம்) தொகுதி எம்.எல்.ஏ-வுமான தட்டிகொண்ட ராஜய்யாவும் ஒருவர். வரும் சட்டமன்றத் தேர்தலில், தட்டிகொண்ட ராஜய்யா எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதியில், கட்சியின் மூத்த தலைவரான கடியம் ஸ்ரீஹரியை வேட்பாளராக நிறுத்த சந்திரசேகர ராவ் முடிவுசெய்திருக்கிறார்.
இந்த நிலையில் தட்டிகொண்ட ராஜய்யா, கட்சியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதன் காரணமாக, ஜங்கவுனில் தன் ஆதரவாளர்கள் முன்பு கீழே விழுந்து அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், தட்டிகொண்ட ராஜய்யாவின் ஆதரவாளர்கள் `ஜெய் ராஜய்யா, ஜெய் தெலங்கானா” எனக் கோஷமிட்டபோது உணர்ச்சிவசப்பட்டு, அவர்கள் முன்பு கீழே விழுந்து கண்ணீர்விட்டார் தட்டிகொண்ட ராஜய்யா. இவருக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணியில், அவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த கிராம தலைவர் ஒருவர், அவர்மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்தது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com