கர்னாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஷலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜகுமார்- உஷா தம்பதிக்கு பிரஜ்வல் என்ற 14 வயது மகன் இருக்கிறான். இவரன் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி அவனது வீட்டின் பின்புறம் சிறுநீரக கழிக்க சென்ற போது ஒரு பாம்பு அவனை கடித்துள்ளது.
அதன்பிறகு, அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகச்சை அழிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு அவனை மீண்டும் இரண்டாவது முறையாக பாம்பு கடித்தது. இதேபோல், அவனை தொடர்ந்து அடுத்தடுத்து சிகிச்சைக்கு பின்னர் 6 முறை பாம்பு கடித்துள்ளது.இந்த தொடர் சம்பவத்தை கண்டு அவன் பெறோர்கள் பயந்தன. இதனால் அவர்கள் வேறு இடத்தில் இடம் பெயர்ந்து வாடைகைக்கு வீட்டிற்கு குடியேறினர். இதனைதொடர்ந்து, அந்த சிறுவனை மீண்டும் 2 முறை பாம்பு கடித்து மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திருமினான்.
Also Read : இல்லத்தரசிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி..! சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடி குறைப்பு! மத்திய அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி அன்று பிரஜ்வலை என்ற சிறுவனை 9 வது முறையாக பாம்பு கடித்துள்ளது. அதன்படி அவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறான். இதனை கண்டு அவனது பெற்றோர்கள் நாகதேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். இந்த இரண்டு மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in