இந்நிலையில்தான், மைதீன்கானுக்கு எதிராக நெல்லை மாநகர திமுகவில் உள்ள 31 வட்டச் செயலாளர்கள் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட திமுகவில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பொறுப்பு அமைச்சரை மாற்றியும் எந்த புண்ணியமும் இல்லை. இவ்வளவு நடந்தும் தலைமை நெல்லைமீது கவனம் செலுத்தவில்லையென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்குள் தலைமை நெல்லை கழகத்தில் நிலவும் கோஷ்டி பூசலை சரிசெய்யவேண்டும்.“ என்றனர் விரிவாக…
அந்த புகார் கடிதத்தில் மைதீன்கானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ’மாநகர செயலாளரை தொடர்பு கொள்ளாமல் பகுதி செயலாளர்களை தொடர்பு கொள்கிறார்’ என்ற குற்றச்சாட்டு, மாநகர செயலாளர் சுப்பிரமணியனுக்கும், மைதீன்கானுக்கும் இடையே இருக்கும் பனிப்போரை அமலப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் மற்றும் நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டு அவர்களை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக உள்ளோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com