சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2 மணி அளவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டின் மாபெரும் திருவிழாவான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. இப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
மேலும் இந்திய அணி ஆசிய கோப்பையில் வெற்றி மற்றும் ஆஸ்திரேலிய தொடரை கைப்பற்றியது என பல்வேறு வெற்றிகளை பெற்று இன்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அதோடு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சூப்பர் ஃபார்மில் இருப்பதோடு நம்பர் ஒன் அணி என்ற தகுதியுடனும் களமிறங்குகிறது.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் ஓபனர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு நாட்களாக வலைபயிற்சிக்கு வரவில்லை. மேலும் அவர் மருத்துவ கண்கானிப்பில் உள்ளதால் அவருக்கு பதில் இஷாந்த் கிஷனை ஓபனராக களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இந்திய அணியானது ரோஹித்,இஷாந்த், விராட் ,ராகுல்,ஷ்ரேயஸ் ஐயர் என சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள இந்தியா ஆஸ்திரேலிய அணியின் அதிவேக பந்துவீச்சை முறியடிக்க காத்திருக்கிறது. மேலும் எதிரணியை பயமுறுத்த ஆல்ரவுண்டரான ஜடேஜா, ஹர்த்திக் பாண்டியா காத்திருக்கின்றனர். பந்து வீச்சாளரான பும்ரா, சமி சிராஜ் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சாவலாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் சேப்பாக்கம் மைதானம் ஆனது சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானம் ஆகும். எனவே, சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்,ஜடேஜா, குல்தீப் கூட்டணி ஆஸ்திரேலியாவை திணறடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானம் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு பழக்கப்பட்ட மைதானம். எனவே, எதிரணி ரன்களை குவிப்பது சற்று கடினமான ஒன்று தான். மேலும் ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை பந்துவீச்சில் பலம்வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது.
அதனோடு ஆஸ்திரேலியாவிற்கு சேப்பாக்கம் மைதானம் அதிஷ்டமான மைதானமாக திகழ்கிறது. பேட் கம்மின்ஸ்- ஸ்டாக் ஹேசில்வுட் கூட்டணி இந்திய பேட்ஸ்மென்களுக்கு மிக சவாலாக அமையும். மேலும் இவர்களை சமாளித்தால் தான் இந்தியா ரன்களை குவிக்கமுடியும் மற்றபடி சுழற்பந்துவீச்சில் இந்தியாவிற்கு நிகரான வீரர்கள் வேற எந்த அணியிலும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் பேட்டிங்கில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளனர்.
Also Read : இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் யுத்தம்..! ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட உடல்களின் நடுங்க வைக்கும் காட்சிகள்!!
இதனை தொடர்து உலகக் கோப்பையில் இரண்டு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் நான்கு போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் போது மழை வருவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை பொழிந்தாலும் முடிவு எட்டப்படும் போட்டியாகவே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in