1996 -2001 தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதேபோல அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.
இந்த நிலையில் இந்த வழக்குகளையெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வந்தார். இந்த விசாரணையின்போது, “சொத்துக் குவிப்பு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நடந்துள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன.” என்றவர் குறிப்பாக பொன்முடி வழக்கில், “நான்கு நாளுக்குள் 172 அரசு தரப்பு சாட்சிகள், 381 ஆவணங்களின் சாட்சியங்களை மார்ஷல் செய்து, ஜூன் 28, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 226 பக்க தீர்ப்பை வழங்கியுள்ளார் வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி. இது நீதிபதியின் மிகப்பெரிய சாதனை. தீர்ப்பை வழங்கிய இரண்டு நாளில், பணியில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்தே நீதிபதி வசந்த லீலா தனது வேதனையைப் பதிவு செய்திருந்தார்.
முன்னதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றப்பட, அனைத்து வழக்குகளும் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com