தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, அந்த டி.எஸ்.பி-யும், இன்ஸ்பெக்டரும் சம்பந்தப்பட்ட ரெளடியைத் தொடர்புகொண்டு, கைது நடவடிக்கை குறித்து அலர்ட் செய்திருக்கிறார்கள். கூடவே, இந்தக் கைதிலிருந்து தப்ப உதவுகிறோம் எனச் சொல்லி பேரமும் பேசியிருக்கிறார்கள். ஆனால், பேரம் படியவில்லையாம். இதையடுத்து இருவரும் தீவிரமாகச் செயல்பட்டு அந்த ரெளடியைக் கைதுசெய்திருக்கிறார்கள்.
கடுப்பான ரெளடித் தரப்பு, அந்த அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ பதிவு ஆதாரத்துடன் டி.ஜி.பி அலுவலகத்துக்குப் புகாராக அனுப்பிவிட்டது. அதைப் பார்த்த பிறகே, சம்பந்தப்பட்ட இருவரையும் இடமாற்றம் செய்ததோடு, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது எனவும் விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது டி.ஜி.பி அலுவலகம்” என்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com