பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசு அதிகாரிகள் ஒருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேசிய கிராமத்து பெண்கள், “எங்கள் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் 15 அல்லது 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது.
குடிநீர் கோரி ஆட்சியரிடமும் யூனியன் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சில வாரங்களுக்கு முன்பு கிராம மக்கள் அனைவரும் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாங்கள் போராட்டம் நடத்தியபோது நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆணைபுரம் கிராமத்துக்கு சீரான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டோம்.
ஆனாலும் இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. நாங்கள் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால் எங்களின் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. அதனால்தான் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக காலிக் குடங்களை மரத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டோம்.
நன்றி
Publisher: www.vikatan.com