கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்தே இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இதனால், இஸ்ரேவும் பதிலடி தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இந்த பதில் தாக்குதல் காரணமாக காசா மக்கள் சுமார் 230 மேற்பட்டோர் பரிதாமாக உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. இதன் காரணமாகத்தான் இரு அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த போர் காரணமாக இஸ்ரேல், ஹமாஸ் குழுவினனரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Also Read : ஆப்கானிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்!!
மேலும், காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in