எப்போதும் ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தால், யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ அவர்களுடைய சம்மதம் மிகவும் முக்கியம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது.
ஆனால், இன்றளவும் நாட்டில் பலர் திருமணம் செய்து கொள்ள போகும் நபர்களின் சம்மதத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் கேட்கவே வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதை தான் செயல்படுத்துகிறார்கள். ஆனால், பெண் பிள்ளைகளின் விருப்பம் என்ன? என்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
இதன் காரணமாக, பல பெண்கள் திருமணத்திற்கு பிறகு ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து தவித்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, உத்திரபிரதேச மாநில பகுதியில் வாசித்து வருபவர் ஷிவானி (18) என்ற இளம் பெண். இவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஷிவானிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால், ஷிவானியின் விருப்பத்தை பற்றி, அவர்கள் கேட்கவே இல்லை என்று கூறப்படுகிறது.
சிவானியின் விருப்பத்தை கேட்காமல், அவருடைய திருமண ஏற்பாடு குடும்பத்தினரால், முன்னெடுத்து வரப்பட்டது. இந்த நிலையில் தான், குடும்பத்தினர் சிவானிக்காக பார்த்த மாப்பிள்ளையை சிவானி எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால், குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனாலும், சிவானியிடம், எப்படியாவது, திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விடலாம் என்று நினைத்த பெற்றோர்கள், அவரிடம் சமாதானம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிவானி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்ற தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
இதன் காரணமாக, கோபமுற்ற சிவானியின் அண்ணனான ஆஷிஷ் யாதவ் என்ற இளைஞர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிவானியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனால், பதறிப்போன ஷிவானியின் குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கே சிவானியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இதன் காரணமாக அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கதறி அழுந்துள்ளனர்.
அத்துடன், இந்த விவகாரம் குறித்து, சிவனியின் நலம் விரும்பிகள் வழங்கிய புகாரை அடிப்படையாக வைத்து, காவல்துறையினர் சிவானியின் அண்ணனான ஆஷிஷ் யாதவை அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த சிவானியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com