தி.மு.க., கடந்த 40 ஆண்டு காலமாக தனது குடும்பத்துக்காகவே பாடுபட்டு வருகிறது. பேச்சு மட்டுமே தமிழ், தமிழர் என்று உள்ளது. ஆனால் அவர்களது செயல்பாடுகள் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது. அவர்களது நோக்கம் எல்லாமே அரசியல் அதிகாரம் மட்டும்தான். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் காவிரி பிரசனையில் தமிழக முதல்வர் மௌனம் சாதிக்கிறார். அவர் காங்கிரஸை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
காவிரி உரிமை பறிபோனாலும் பரவாயில்லை கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மணல், குவாரி, ரியல் எஸ்டேட், திரைப்படம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது. இதைவிட அப்பட்டமான சர்வாதிகாரம், பயங்கரவாதம் வேறு ஏதும் இருக்க முடியாது. பேசுவது தான் ஜனநாயகம். ஆனால் நடப்பதெல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக உள்ளது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com