இந்த நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களில் தனது தலைமுடியைக்கூட தொட முடியாது என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார்.
தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் மெசேஜ் அனுப்பியது குறித்து ஊடகத்திடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “முன்னதாக 2021-ல், உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலிலிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை அவர்கள் (பா.ஜ.க) கொண்டுவந்தார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனாலும், அதில் எதுவுமே வெளிவரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் நடக்கிறது.
2024-ல் தேர்தல் நடக்கவிருப்பதால், அவர்கள் முக்கிய பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப விரும்புகிறார்கள். எம்.பி-க்களுக்கு ஏதாவது நேர்ந்தால், சபாநாயகர் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, சிறப்புரிமைக் குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். ஆனால், நாம் என்ன பார்க்கிறோம்… நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இ-மெயில் லாகின் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. இது முழுக்க முழுக்க குப்பை. அதை நான் தகர்க்கத்தான் போகிறேன். அவர்கள் என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களால் என் தலையில் ஒரு முடியைக்கூட தொட முடியாது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com