”படத்துல வாய்ப்பு கிடைக்கனும்னா படுக்கைக்கு வர சொன்னாங்க”..!! அட்ஜஸ்மெண்ட் குறித்து விஜயலட்சுமி அதிர்ச்சி தகவல்..!!

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஞ்சாதே, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம், கசடதபர உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தனது காதலரான ஃபேரோஸ் முஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். பின்னர், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட விஜயலட்சுமி, வெற்றிகரமாக 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து, 3-வது இடத்தை பிடித்தார். தற்போது இவர், வெப் சீரியஸ்-களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ”நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால், பல இடங்களில் இதுதான் நடக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், அவர்கள் படுக்கைக்கு வருவார்களா? என்று தான் முதலில் எதிர்பார்க்கின்றனர்.

அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு முறை அட்ஜஸ்ட்மெண்ட் கோரிக்கையுடன் சிலர் என்னை அணுகினார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை. நடிப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆரம்பத்தில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தன்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் கூறிவிட்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கினேன்” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *