மேலும், டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சசேத்வா, “காலையிலிருந்து திருடர்கள் சத்தம் போடுவதையும், கெஜ்ரிவாலுக்காக புலம்புவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமலாக்கத்துறையிடமிருந்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் கெஜ்ரிவால். நீங்கள் எப்போது ஊழல் செய்தீர்கள்… அமலாக்கத்துறை உங்களை மூன்று முறை அழைத்தது. அப்போது போகாத நீங்கள், இப்போது கைதுசெய்யப்படலாம் எனப் புலம்புகிறீர்கள். டெல்லி முதல்வர் என்ற முறையில் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது உங்கள் பொறுப்பு. ஆனால், நீங்கள் அதைப் பின்பற்றவில்லை” என்று ஊடகத்திடம் கூறியிருந்தார்.
இருப்பினும், ஆம் ஆத்மி அமைச்சர் கூறியதுபோலவோ, கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீஸார் குவிந்ததற்கு ஏற்றார்போலவோ அமலாக்கத்துறை தரப்பிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மாறாக, மீண்டுமொருமுறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கெஜ்ரிவால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com