தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவரும் காங்கிரஸ், தெலங்கானாவில் சற்று கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.


தெலங்கானா தேர்தல் பிரசாரங்கள் முழுக்க, `பா.ஜ.க-வின் `பி’ டீம் பி.ஆர்.எஸ். மத்தியில் பா.ஜ.க-போல, மாநிலத்தில் ஊழல் நிறைந்த அரசு பி.ஆர்.எஸ் அரசு” என்று காங்கிரஸ் அழுத்தமாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், மத்தியில் மோடியைத் தோற்கடிக்க வேண்டுமானால், முதலில் கே.சி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், இந்த சித்தாந்தப் போட்டியில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சூளுரைத்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com