இருப்பினும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது”‘ என இன்று தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னொருபக்கம், மத்தியப் பிரதேசத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸுடன் முட்டிக்கொண்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், ஜனநாயகத்தைக் காப்பற்ற நினைப்பவர்கள் தங்களோடு இருப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.
கூட்டணி சலசலப்புக்கு மத்தியில் கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “இந்தியா கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதே தெளிவாகத் தெரியவில்லை. நாளை நான் டேராடூனுக்குச் சென்று, பின்னர் டெல்லிக்குச் செல்கிறேன். எனவே, முழுத் தகவலையும் பெற்றதும் என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அனைவரையும் ஒன்றிணைப்பதே எங்களுடைய முயற்சி. மம்தா, லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசியிருக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், கூட்டணி வெற்றிபெறும். அதோடு, ஜனநாயகத்தைக் காப்பதில் ஆர்வமுள்ளவர்கள் மனம் மாறாமல் எங்களுடன் இருப்பார்கள்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com