மேலும் முதல்வர் வெளிநாடு செல்லும்போது தமிழகத்தில் தொழில் தொடங்க சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். இதேபோல் தமிழக அரசு விரைவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. அதற்கு தேவையான தரவுகளை தயாரிக்கும் வேலைகள் தலைமை செயலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே அதன் தற்போதைய நிலை குறித்து துறை ரீதியாக முதல்வர் கேட்டறிவார்.


மேலும் ஒவ்வொரு துறையிலும் புதிதாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். பின்னர் 28ம் தேதி வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி முதல்வாரம் சென்னை திரும்புவார். பிறகு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்படும். இந்தமுறை முதல்வரின் வெளிநாட்டு பயணம், தி.மு.க இளைஞரணி கூட்டம், பிரதமர் மோடி தமிழகம் வருகை உள்ளிட்ட காரணங்களினால் தாமதமாக சட்டசபை கூடுவது குறிப்பிடத்தக்கது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com