தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், “மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டத்தால் 1942-க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லையென்றால் 1947-ல் இந்தியா சுதந்திரமடைந்திருக்காது” என்று கூறி விவாதத்தைக் கிளப்பியிருந்தார். இந்த நிலையில், காந்தியை தான் அவமரியாதை செய்ததாகத் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சி நடப்பதாகத் தெரிவித்திருக்கும் ஆளுநர் ரவி, தான் பேசிய அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகளே என்றும், ஆனால், காந்தியை அவமதிப்பது தனது நோக்கமல்ல என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


அந்த முழுமையான அறிக்கையில், “கடந்த 3-4 நாள்களில் வெளியான சில ஊடகச் செய்திகள், தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்ததாக ஒரு தவறான தோற்றத்தை உருவாக்க முயல்கின்றன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நான் மகாத்மா காந்தி மீது உயரிய மதிப்பைக் கொண்டுள்ளதுடன் அவருடைய போதனைகளை என் வாழ்க்கையின் லட்சியங்களாக உள்ளன.
நன்றி
Publisher: www.vikatan.com