தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற assistant professor பணிக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களையும் தெரிந்து கொண்டு, விண்ணப்பம் செய்து பயனடையலாம்.
Assistant professor பணிக்கு நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில், B.com,MBA, PhD, m,sc,M.E,M.Tech என்று இந்த பணிக்கு தொடர்பான, ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. வயது வரம்பில் வழங்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு 40,000 முதல் 45000 ரூபாய் வரையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4.9. 2023 தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Download Notification PDF 1
Download Notification PDF 2
நன்றி
Publisher: 1newsnation.com