நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமானை நம்பி தற்போது இந்த இடத்தில் நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக அப்போது கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இப்போது வரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்” என்று கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நடிகை விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள். அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன். அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நம்பி பல கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
எனக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது. அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்” என்று கடுமையாக விமர்சித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com