1980 களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ராதா. இவர் நடிகை அம்பிகாவின் சகோதரி ஆவார். நடிகை ராதா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடுத்துள்ளார். நடிகை ராதா அவர்களுக்கும் மும்பை தொழிலதிபரான ராஜசேகரன் அவர்களுக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுடைய பெயர் கார்த்திகை. இளைய மகளுடைய பெயர் துளசி.
நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா தமிழில் வெளியான கோ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல், அருண் விஜயுடன் வா டீசல், பாரதி ராஜா இயக்கிய அன்னக்கொடி போன்ற பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ALSO READ : விசாகப்பட்டின துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து..! 50 க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி!!
இந்நிலையில், நடிகை கார்த்திகாவும் மும்பை தொழிலதிபரான ரோஹித்தும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படத்தை நடிகை கார்த்திகா இணையத்தில் வெளியிட்டார். இதையடுத்து, நடிகை கார்த்திகா மற்றும் ரோஹித்துக்கு நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மலையாள நடிகர்கள், தமிழ் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in