கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com