அக்டோபர் 8 முதல், வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.
ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 20,000 என வரம்பு உள்ளது.
அப்படியில்லை எனில் 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய தபால் மூலம் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பலாம். இதன்மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் அந்த தொகை சேர்க்கப்படும். ஆனால், இந்தப் பரிவர்த்தனை அரசின் கட்டுப்பாடு மற்றும் ஆவணங்களுக்கு உட்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், மூன்று மாத காலத்திற்கும் மேல் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையிலும், வங்கிகள் மூலமாக 3.34 லட்ச கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னமும் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், வராமல் போன அந்த 12 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருப்பது யார்?
நன்றி
Publisher: www.vikatan.com