நடப்பு ஆண்டு உலக கோப்பை கிரிகெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. இந்த உலக கோப்பை தொடரானது வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதில், ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றனர். உலக கோப்பை போட்டியின் முதல் குஜராத் மாநிலத்தில் உள்ள மோடி மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியிலேயே நடப்பு ஜாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு அணிகள் மோதிகொண்டனர். இதில் இந்திய அணி தொடர்ந்து 7 வெற்றி புள்ளி எடுத்து பட்டியலில் முதல் இடத்திலும் 6 வெற்றி புள்ளியை பெற்று தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதியான அணிகளாக தேர்வாகியுள்ளனர்.
ALSO READ : குறைந்த விலையில் பட்டாசு! எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்! மக்களே உஷாரா இருங்க…!
இந்நிலையில், கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஈடன் கார்சன் மைதானத்தில் தற்பொழுது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெள்ள போவது யார் என்ற சுவாரசியத்துடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பட தக்கது.
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரையும் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிக ரன்களை குவித்து வருகின்றனர். இப்படியே போனால் இந்திய அணி 400 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியில், ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அதேபோல், தென்னாப்பிரிக்கா அணியில், குயின்டன் டி காக்(WK), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…
நன்றி
Publisher: jobstamil.in