இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் சங்கரய்யா அவர்கள். இவருக்கு வயது 102 . இவர் கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை 9.30 மணியளவில் தியாகி சங்கரய்யா காலமானார். இவரது உடல் சென்னையில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ : IND Vs NZ : அரையிறுதி போட்டியை வெல்லப்போவது யார்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அவர்களும் அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோரும் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in