
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கடுவது “ஆதார்” அடையாள அட்டைதான். எந்தவொரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலும் அல்லது எந்த பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு ஆதார் முக்கியமாக தேவைப்படுகிறது. சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை, அனைவரும் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுவதை போல மாணவர்களுக்கு “அபார்” என்ற அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுலதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த “அபார்” அட்டைக்கு தமிழில் “தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு இந்த அபார் அட்டை வழங்குவதன் மூலம் போலி கல்வி சான்றிதழ்களை எளியான முறையில் கண்டறிந்து கொள்ள முடியும்.
ALSO READ : ஜனவரி முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்..! சற்றுமுன் வெளியான தகவல்!!
மாணவர்களுக்கு வழங்க உள்ள “அபார்” அடையாள அட்டையில் மாணவரின் கல்வி விவரம் மற்றும் அவர்களின் கூடுதல் திறமைகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் அவர்களின் ஆதார் கார்டிலிருந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த “அபார்” அட்டை மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன்பின்புதான் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் இதுகுறித்து அறிவிப்புகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in