தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ : ஜெயம் ரவி, நித்யாமேனன் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு..!
விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு முதல் பெய்த கனமழை இன்று காலை வரையிலும் நீடித்து வந்தது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வேறொரு தேதியில் நடைபெறும் என்றும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in