டிசம்பர் மாத முதல் வாரத்தில் மிக்ஜம் புயலால் சென்னையே ஸ்தம்பித்து போனது. இந்த புயலால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்ட்டனர். மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கியது. இந்நிலையில், தற்பொழுது சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதனையடுத்து, கடந்த 17 மற்றும்18 ஆகிய இரண்டு நாட்களும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டது. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. தற்பொழுது வெள்ளநீர் வடிந்து வருவதால் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் சுமார் 13 ஆயிரத்து 500 ஆசிரியர் காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 2 ஆயிரத்து 582 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜனவரி 7 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, மழை, வெள்ள பாதிப்பு காரணமாக பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வானது ஒத்திவைக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ : வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.100 வரை குறைய வாய்ப்பு..! மத்திய அரசின் அதிரடி திட்டம்!!
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திகுறிப்பில், மொத்தம் 2 ஆயிரத்து 582 ஆசிரியர் பணியிடங்களுக்காக வருகிற 7 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதிக்கு (04.02.2024) ஒத்திவைக்கப்ட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தார்ரகளுக்கு வழங்கப்பட்ட தேர்வுக்கான நுழைவு சீட்டினை பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in