தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதமும், முழு ஆண்டு தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டு பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகிற 11 ஆம் தேதியும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாளையும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாகவே மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
ALSO READ : மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னை உள்பட 4 மாவட்ட கல்லூரிகளுக்கு வரும் 11 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு!
இந்த சூழ்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பயின்று வரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை(டிசம்பர் 7) நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுக்கு தயாராகாமல் உள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட அரையாண்டு தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in