
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகத்தான் இருந்து வருகிறது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தினசரி ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினம் கடந்த 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அன்றைய நாள் மெட்ரோ ரயிலில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் ரூ.5 மட்டும் செலுத்தி எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று அறிவித்தது. இந்த சலுகை அன்று ஒரு நாள் மட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் இந்த சலுகையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்தனர்.
ALSO READ : ஆரஞ்சு அலர்ட் எதிரொலி : தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
இதனையடுத்து, இந்த சலிகையானது மீண்டும் நாளை(டிசம்பர் 17) வழங்கப்பட உள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி பொதுமக்கள் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. மக்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in