தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகம் கீழ் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்வு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்பொழுது தேர்வுக்கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இளநிலை [படிப்பில் ஒரு தாளுக்கான தேர்வு க்கடணம் ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தால் ரூ. 225 செலுத்த வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் செமஸ்டர் ஒன்றுக்கு 9 தாள்களுக்கும் சேர்த்து ரூ.2,050 செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ALSO READ : கருணாநிதி நூற்றாண்டு விழா : ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு!
இதையடுத்து, அண்ணா பல்கலைகழகம் தேர்வு கட்டணம் மட்டுமல்லாமல் செய்முறை சமர்ப்பிப்பு மற்றும் ப்ராஜெக்ட் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இளநிலை செய்முறை சமர்பிப்பு கட்டணம் ரூ.450 ஆகவும், இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கான கட்டணம் ரூ.600 லிருந்து தற்பொழுது ரூ.900 உயர்த்தியும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 50 சதவீதம் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in