பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே அது மழை காலம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு, கார்த்திகை மாதங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும். அந்த வகையில், தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மழை பொழிவும் ஆரம்பம் ஆகிவிட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ALSO READ : தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க இன்னும் 5 மீட்டர் மட்டுமே உள்ளது! அதிகாரிகள் தகவல்…
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை(நவம்பர் 30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் நாளை மறுதினம் (டிசம்பர் 1) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in