இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இன்டர்நெட் சேவை மனித வாழ்வின் ஒரு பங்காக மாறிவிட்டது. இந்த இன்டர்நெட் சேவைகளை வழங்க தனியார் நிறுவனங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டு கொண்டு பல்வேறு சிறப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் சேவைகளை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது.
ALSO READ : நெல்லை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் – இன்று முதல் டோக்கன் விநியோகம்
அந்த வகையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆண்டிற்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரூ.2 ஆயிரத்து 999 க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS ஆகிய வசதிகளை வழங்கி வந்தது. தற்பொழுது புத்தாண்டு சிறப்பு சலுகையை முன்னிட்டு ரூ. 2 ஆயிரத்து 999 க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 389 நாட்களுக்கு 2.5 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100SMS ஆகிய வசதிகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை மிக குறைவான நாட்களே இருக்கும் என்பதால் உடனடியாக அருமையான ஆஃபரை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in