இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் தலா இரண்டு முறை விளையாடும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெறும்.
இந்நிலையில், தற்பொழுது உலக கோப்பை தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவு பெற்ற நிலையில், இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கு இன்று(புதன்கிழமை) முதல் அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த அரையிறுதி போட்டியில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
ALSO READ : மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!
இதையடுத்து, உலக கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் புள்ளி பட்டயலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு தகுதியாகியுள்ளது. இன்று தொடங்கப்பட உள்ள அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டத்திலேயே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளனர். அரையிறுதி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டத்தில் முகமது சிராஜ்க்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது சிராஜ்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்து விடுமோ என்று ரசிகர்கள் மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in