பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக வங்கிகளும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன் பெற்று வருகின்றனர். இதில், மிகவும் பிரபலமான தனியார் பைனான்ஸ் நிறுவனமாக “பஜாஜ் பின்சர்வ் பைனான்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களின் கீழ் மக்களுக்கு கடனை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் இருக்கும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு தடையை வித்தித்து வருகிறது. அந்த வகையில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிமுறையை கடைப்பிடிக்காத காரணத்தால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க தடை விதிக்கபட்டுள்ளது.
ALSO READ : இஸ்ரேலுக்கு ஆதரவாக 2.9 லட்ச அமெரிக்கர்கள் ஒன்று கூடி பிரமாண்ட பேரணி..!
அதன்படி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ‘இ-காம்’ மற்றும் ‘இன்ஸ்டா இஎம்இ கார்டு’ ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விதித்த இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக எந்தவொரு உண்மை விவரங்களையும் தெரிவிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த குறைபாடுகள் அனைத்தும் சரி செய்த பின்னரே இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in