இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நிலவி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்தியதையொட்டி இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடித்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இருதரப்பினருக்கும் இடேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் 4 நாட்கள் போரை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த போரில் காசா பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த போரில் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் மேறபட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இருதரப்பினருக்கும் இடையே நடைபெறும் போரில் இஸ்ரேலில் மட்டும் சுமார் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ : இனி வாட்ஸ் அப்பிலும் AI யூஸ் பண்ணலாம்..! சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்!!
இந்த சூழ்நிலையில், உலக பணக்ககரர் பட்டியலில் ஒருவராக இருப்பவரும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், எக்ஸ் வலைதளத்தின் விளம்பரங்கள் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்த போர் காரணமாக பாதிக்கப்பட்ட மருத்துவமனையை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in