கடந்த வாரம் மிக்ஜம் புயல் பாதிப்பால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதில் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நடுத்தெருவிற்கு வந்தனர். அந்த அளவிற்கு இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீடுகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றளவிலும், சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வற்றி இயல்பு நிலைக்கு வந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வற்றாமல் உள்ளதால் மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ : மிகஜ்ம் புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ.2,500 நிவாரணத்தொகை – ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு
மிக்ஜம் புயல் துயரத்தில் இருந்தே இன்னும் வெளியே வர முடியாமல் இருக்கும் சென்னை மக்களுக்கு மீண்டும் ஒரு ஷாக் செய்தியை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி,தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலும் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in