இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறைகள் மூலம் சுமார் 800 சுங்கச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளது. அவற்றில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 54 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த கட்டணமானது குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் மாற்றியமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Also Read : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலை அறிவிப்பு! ஒவ்வொரு மாசமும் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கலாம்!
கட்டண உயர்வுபடி, கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85 லிருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125 லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145 லிருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220 லிருந்து ரூ.240 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in