சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோியிலில் இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடற்கரையில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை நாளை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுபான கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com