முன்னதாக வாகனங்கள் குறைந்து காணப்பட்ட நிலையில் விபத்துக்களும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்பொழுது மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் உள்ளது. ஒவ்வொரு நபரும் சொந்த வீடு வைத்திருகிறார்களோ இல்லையோ ஆனால் சொந்த வாகனம் வைத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறோதோ அதே அளவிற்கு வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்சின் நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்ற லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.
Also Read > தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்..! அன்பில் மகேஷ் தொடங்கி வைத்த “மணற்கேணி” செயலி!!
கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி நிலைதடுமாறி சாலைக்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் சென்றுகொண்டிருந்தவர்கள் என 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in